கூட்டு பிரார்த்தனை..கட்டுரை

 புண்ணிய க்ஷேத்திரத்தில் ஆன்மிக அலைகளைப் பரப்பி புனிதப் படுத்த அனைவரையும் இணைத்து கூட்டு பிரார்த்தனை செய்து இறைவனை ஆராதிக்க எங்களைத் தேர்ந்தெடுத்தமைக்கு  மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவம் நாம் அறிவோம்.க்ருதயுகத்தில் தியான மார்க்கமாகவும், த்ரேதா யுகத்தில் வேள்வி மார்க்கமாகவும், துவாபர யுகத்தில் விக்ரஹ வடிவை பூஜித்தும் கிடைத்த பலன் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் மூலம் கிடைத்துவிடும். இக்கலிகாலத்தில் நாமஸ்மரணையும், ஸ்லோக பாராயணமுமே  இறைவனை அடையும் வழியாகப் பெரியோர் கூறியிருப்பது நாம் அறிந்ததே.

நான்கு ஆண்டுகளாக அனுபவம் பெற்ற திருமதி லலிதா, திருமதி ஜெயா அவர்களின் வழிகாட்டலில் சிறப்பாக நடத்த தேவியின் அருளை வேண்டுகிறேன். எளிய முறையில் கூட்டு பிரார்த்தனை செய்யும் எங்களுக்கு மண்டலி, வழிபாட்டுக்குழு என்ற தனிப்பட்ட பெயரெல்லாம் தேவையில்லை என்பது எங்கள் எண்ணம்.

இந்த கூட்டுப் பிரார்த்தனை கடந்த கொரோனா நாட்களில் எங்களுக்கு  ஒரு மனநிம்மதியையும், பாதுகாப்பையும் கொடுத்ததை இரண்டு வருடங்களாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும்  புண்ணிய க்ஷேத்திரவாசிகள் மறந்திருக்க மாட்டார்கள். இதில் பெண்கள் மட்டுமின்றி ஆடவரும் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில மாதங்களாக கண் பட்டாற்போல் பிரிந்து நிற்கும் இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் பழையபடி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திட நாம் ஒன்று கூடி இந்த பிரார்த்தனையில் ஈடுபடுவோம்.

இங்கு வசிக்கும் இருபாலாரும்  இதில் பங்கு கொள்ளலாம். நிர்வாகி திருமதி லக்ஷ்மி பிரபா அவர்கள் அனுமதியின் பேரில் தியான மண்டபத்தில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை ஆறு மணிக்கு ஸஹஸ்ரநாம ஸ்லோகங்களை சொல்லி வருகிறோம். இதில் அனைத்து புண்ணிய க்ஷேத்திர
வாசிகளும் இணைந்து கொண்டு இறையருளைப் பெற வேண்டுகிறேன்🙏🏻

Comments

Popular posts from this blog

ஜெயஜெய தேவா.

செல்வ(ல)விநாயகா சரணம்🙏🏻...கட்டுரை