ஜெயஜெய தேவா.

 ஜெயஜெய தேவா..ஜெயஜெய தேவா..செல்வ விநாயக சரணம்..

(ஜெய ஜெய தேவா)

விக்னேஸ்வரனை துதித்தால் என்றும் துன்பம் அகன்றிடுமே..
ஐயன் கணபதி தாளினை  நினைத்தால் சகல வினைகளும் நீங்கும்..சர்வ மங்களம் சேரும்..
(ஜெயஜெய தேவா..)

வக்ர துண்டனை வழிபட்டால் நம் வாழ்வு நலமாகும்..
சிவ சக்தி பாலனை சிந்தையில் துதித்தால் நினைப்பது நிறைவேறும்..
அத்தனை மரத்தின் கீழும் அழகாய் அமர்ந்திருப்பவன் நீயே..
வேண்டும் வரங்களை எமக்கருள் செய்வாய் செல்வ விநாயக நீயே..
ஸ்ரீ செல்வ விநாயக நீயே..
ஜெயஜெய தேவா..ஜெயஜெய தேவா..

பாசம் அங்குசம் தந்தம் மோதகம் நான்கு கரங்களில் தாங்கி நிற்பார்..சுவாமி(பாசம்)
மூஞ்சூறின் மேல் அமர்ந்திருப்பார்..
முழுமுதல் கடவுளும் அவரே..
முக்தியைத் தருவதும் அவரே..
கணபதி..கணேசன்..விக்னவிநாசன் அவரே..
செல்வ விநாயக சரணம்..
ஸ்ரீ செல்வ விநாயக சரணம்
ஜெயஜெய தேவா..

Comments

Popular posts from this blog

கூட்டு பிரார்த்தனை..கட்டுரை

செல்வ(ல)விநாயகா சரணம்🙏🏻...கட்டுரை