செல்வ விநாயகா சரணம்...கட்டுரை


செல்வ விநாயகா சரணம்

குடந்தை அருகில் மாங்குடியில் இயற்கை அழகோடு காவிரித் தாயின் கவின் மிகு வளத்தோடு, பல புண்ணிய க்ஷேத்திரங்கள் சூழ்ந்த புனிதமான பூமியில் அழகுற அமைந்துள்ள எங்கள்  புண்ணிய க்ஷேத்திரத்தில் மறைந்து கொண்டிருக்கும் அக்கிரஹாரத்தை மீண்டும் சிறப்புற உருவாக்கிய நிர்வாகி திரு லக்ஷ்மி நரசிம்மன்,திருமதி லக்ஷ்மி பிரபா மற்றும் அவர் குடும்பத்தினர்க்கு நன்றி 🙏🏻.


இவ்விடத்தில் ஒரு ஆலயம் உருவாக்கும் ஆசை எங்களுக்கு இருந்ததால், கடந்த 

பிப்ரவரி 15 அன்று ஸ்ரீ செல்வ விநாயகருக்கு ஒரு சிறு ஆலயம் உருவாக்கப்பட்டது. மிக அழகாக அற்புதமான கலை அம்சத்துடன், அவரை தரிசித்ததுமே நம் துன்பங்களை, துக்கங்களை, அல்லல்களை அருகில் வராமல் அகலச் செய்யும் மனநிலையைத் தரும்  ஈசன் மகன் ஐங்கரனைக் காணக் கண்கோடி வேண்டும்.


இறைவனை புதிதாகப் பிரதிஷ்டை செய்து அவருக்கு பிராண சக்தியைத் தரும்   ஹோமங்கள்  வேத மந்திரங்களுடன் ஆகம விதிப்படி  கும்பாபிஷேகத்தை  சிறப்புற நிகழ்த்திய

சிவாச்சாரியர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🏻.


இன்று மண்டல பூஜை மிக விமரிசையாக நடை பெற்றது. தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் மண்டலாபிஷேக நாள் வரை பூஜை செய்ய என் கணவர் திரு.பாலசுப்ரம

ணியன் பொறுப்பெடுத்துக் கொள்ள, அவருக்கு உதவி செய்ய தாமே விருப்பத்துடன் இணைந்து கொண்டனர் திரு. சுப்ரமணிய மாமா மற்றும் திரு. வெங்கடேச மாமா இருவரும்.


இந்த நாட்களில் அவர்களின் பக்தியும் உற்சாகமும் சுறுசுறுப்பும் எங்களை ஆச்சரியப் படுத்தியது. இவர்கள் மூவருமே எழுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். காலை நான்கு மணிக்கு எழுந்து தம் அனுஷ்டானங்

களை முடித்து ஆலயத்துக்கு சென்றுவிடுவார்கள்.


என் கணவரும் எண்பதைத் தாண்டிய  திரு சுப்ரமணிய மாமாவும்  இணைந்து பிள்ளையாருக்கு  அத்தனை உபசாரங்களையும் செவ்வனே செய்து, அபிஷேக ஆராதனைகள் முடித்து, ருத்ரம் சமகம், ஸூக்தங்களை முறையாக ஜபித்து, விநாயகரைத் தம் குழந்தை போல் பாவித்து, அழகாக அலங்கரித்து, தீபாராதனை செய்தது மிகவும் பக்தி மயமாக இருந்தது. 


பூஜைக்கு வேண்டியவற்றையும், அபிஷேகப் பொருட்களையும் முறையாக  எடுத்துக் கொடுத்து, நிவேதனங்களை எல்லோருக்கும் விநியோகம் செய்வதுடன், வெளியூரில்

இருந்து பணம் அனுப்பி அர்ச்சனை செய்த பக்தர்களுக்கு பிரசாதத்தை முறையாக அனுப்பி, அவர்களின் மண்டகப்படியன்று பிள்ளையாரைப் புகைப்படம் எடுத்து தவறாமல் அனுப்பிய திரு.வெங்கடேசன் மாமாவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! அவருக்கு அவ்வப்போது உதவிய திரு ரமணி, மற்றும் ருத்ரம் சமகம் சூக்தங்களை அழகாக சொல்லிய சிறுவன் வாசுதேவனுக்கும் நன்றி 🙏🏻


தினம் ஒரு அலங்காரம், தினம் ஒரு நிவேதனம் என்று பிள்ளையாருடன் நாங்களும் ஒன்றி விட்டோம். ஸ்ரீ ராமருக்கு உதவிய அணிலைப் போல  மண்டலாபிஷேக நாள் வரை கணபதிக்கு தினமும்   நிவேதனத்திற்கான  அன்னம் செய்து கொடுக்கும் வாய்ப்பு எனக்கும், நாள் தவறாது பவழமல்லி பூக்களை அழகிய மாலையாக்கி இறைவனுக்கு சாற்ற உதவிய திருமதி லலிதா சுப்ரமணியனுக்கும்  கிடைத்ததை  பெரும் பேறாக எண்ணுகிறோம்.


இதைப் போன்ற சந்தர்ப்பம் கிடைத்ததை சுமையாக எண்ணாமல் ஒரு சுகமான பக்தி அனுபவத்தை பெற்றதாக சந்தோஷப்படும் மூன்று பெரியவர்களுக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் எல்லா நலன்களையும் அருள வேண்டுகிறேன்🙏🏻


புண்ணிய க்ஷேத்திரத்தின் சிறப்புக்கு மேலும் புனிதத்தை சேர்க்கும் செல்வ விநாயகரை தினமும் தரிசித்தவர்களும், வெளி ஊர்களிலிருந்து இந்த தினப்படி பூஜைகளில் பங்கு பெற்றவர்களும் ஐயனின் அருளைப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 


புண்ணிய க்ஷேத்திரம் மேலும் பொலிவும் பெருமையும் பெற்று, இங்கு வாழ்பவர்களின் மனங்களில் வேற்றுமை நீங்கி ஒன்றுபட்ட மனதுடன் இணைந்து துன்பங்கள் தூசாகி  நீடூழி வாழ வினைகளைக் களையும் விநாயகப் பெருமானின் அருளை வேண்டுவோம்🙏🏻


எதிர்பாராமல் எங்களுக்கு  இந்த ஆன்மிக  அனுபவத்தைப் பெறக் காரணமான  நிர்வாகி திரு. லக்ஷ்மி நரசிம்மன் குடும்பத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி 🙏🏻


Comments

Popular posts from this blog

ஜெயஜெய தேவா.

கூட்டு பிரார்த்தனை..கட்டுரை

செல்வ(ல)விநாயகா சரணம்🙏🏻...கட்டுரை