செல்வ(ல)விநாயகா சரணம்🙏🏻...கட்டுரை

 செல்வ(ல)விநாயகா சரணம்🙏🏻

புண்ணிய க்ஷேத்திரத்தில் பொலிவோடும் சிறப்போடும் ஆலயம் கொண்டு அழகுற அமர்ந்திருக்கும் ஆனைமுகனின் அருளை நாம் ஆனந்தமாக அடைந்து கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. இவர் செல்வத்தைத் தரும் எங்கள் செல்லப் பிள்ளையார்!

சோலை நடுவில் எழுப்பப்பட்ட அழகிய ஆலயத்தில் அருள் தர வேண்டிய விநாயகர் அவசரமாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தது ஏன் என்று என் மனதில் ஏற்பட்ட கேள்விகளுக்கு பதிலையும் அவரே சொல்வது போல் உணர்ந்தேன்.

பலநாள் ஜல வாசம் செய்த கணபதிக்கு புண்ய க்ஷேத்திரத்தின் அழகைக் கண்டு ரசித்து மக்களுக்கு வரங்களை வாரி வழங்கும் ஆசை உண்டானதோ! தனக்காக உருவாக்கப்பட்ட இடம் தனக்கு சொந்தமில்லை என்பதை அவர் அறிய மாட்டாரா? அதன் பொருட்டே தற்சமயம் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அவசரமாய் குடியேறி விட்டாரோ!

எப்படியோ இன்று அவரது அருள்விழிகளின் கடாட்சம் அவ்வழி செல்லும் அனைவருக்கும் கிடைப்பதை மறுக்க முடியுமா? அவரைப் பார்த்தும் பார்க்காமலும் ஒதுங்கியும்  வணங்காமலும் செல்லும் அனைவரையும் அவர்  பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவ்வாலயத்துள் அவரை பிரதிஷ்டை செய்திருந்தால் நாம் அவ்விடம் சென்றாலே அவர் தரிசனம் கிடைக்கும். ஆனால் இன்றோ உள்ளே வருபவர்க்கும், வெளியில் செல்பவர்க்கும்  அவர் கருணா கடாட்சம் கிட்டுகிறது! இறைவன் நடத்தும் நாடகம் நாம் அறியோம்🙏🏻அவனன்றோ நம்மை ஆட்டி வைத்து வேடிக்கை பார்த்து நேரம் பார்த்து நம்மை ஆட்கொள்கிறான்.

நாம் விரும்பியதை நிறைவேற்றும் செல்லப் பிள்ளையாராகவே இவரை எண்ணத் தோன்றுகிறது. இவரை இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்வதாக சொல்லிய திரு. லக்ஷ்மி நரசிம்மன் அவர்கள் என் கணவரை மண்டலாபிஷேகம் வரை பூஜை செய்யும்படி வேண்டியபோது நாங்கள் தயங்கினோம். அச்சமயம் 86 வயதான என் சின்ன மாமனார் படுத்த படுக்கையாக இருந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. இந்த பூஜையை ஏற்றுக் கொண்டால் நடுவில் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பயம் வேறு. அச்சமயம் நான் பிள்ளையாரிடம் 48 நாட்கள் என் மாமனாருக்கு எதுவும் ஆகாமல் இருக்க அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டேன்.

என்ன அதிசயம்! அவர் உடல்நிலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டதுடன் தற்போது பழையபடி  நன்றாக ஆகிவிட்டார் என்பதைக் கேட்டபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

என் கோரிக்கையை மட்டுமா நிறைவேற்றினார் இவர்...எங்கோ ஓமனில் இருக்கும் பக்தர் இந்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் பன்னீரில் பச்சைக்கற்பூரம் சேர்த்து அபிஷேகம் செய்யும்படி நம் செக்ரட்டரி திரு வெங்கடேசன் மாமாவிடம் சொல்ல, அவரும் அபிஷேக அலங்கார புகைப்படங்களை அனுப்பி வைத்தார். அபிஷேகத்தின் பலன் சில தினங்களிலேயே தெரிந்ததாக அவர் கூறியுள்ளார். கேட்கும் வரத்தை கேட்டவுடன் தரும் விநாயகரை நாமும் நமக்கு வேண்டியதைக் கேட்போம். புண்ய க்ஷேத்திரத்தில் வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஓங்க அவர் தாள் பணிந்து வேண்டுவோம்🙏🏻

நேற்று இங்கு Phase2வில் 23ம் நம்பர் வீட்டின் உரிமையாள
ரான திருமதி சுபா சங்கர் அவர் தாயுடன் எங்கள் வீட்டுக்கு வந்து சொன்ன செய்தி இவர் செல்வ விநாயகர் மட்டுமல்ல..வரசித்தி விநாயகரும் என்பதை உணர வைத்தது. மார்ச்சில் கிரகப்ரவேசத்திற்கு வந்த சுபாவின் தாய் பஞ்ச துவாரகா யாத்திரை செய்ய இந்த விநாயகரிடம் வேண்டிக் கொண்டு, நிறைவேறியதும் 1000ரூ. காணிக்கையாகத் தருவதாக மனதில் நினைத்துள்ளார். அதன்படி யாத்திரையை நன்கு முடித்ததாகக் கூறி பணத்தைக் கொடுத்தபோது மெய் சிலிர்த்து விட்டேன்.

விநாயகரின் வருகைக்குப் பின்பே பல சங்கடங்களால் ஓய்ந்து போயிருந்த புண்ய க்ஷேத்திரம் மீண்டும் பொலிவு பெற்றதை எங்களால் உணர முடிகிறது. இடையில் தியான மண்டபத்தில்  நின்று போயிருந்த கூட்டு வழிபாடு மீண்டும் தொடங்கியதோடு தற்போது வாரம் முழுதும் நடைபெறுகிறது. தெய்விக நாமத்தின் அதிர்வலைகளின் காரணமாக மனநிம்மதி
யையும், சந்தோஷத்தையும் உணர முடிகிறது.

நாங்கள் அமர்வதற்காக நாற்காலிகளையும், தண்ணீருக்காக அடிகுழாயும் வைத்துக் கொடுத்த  POA குழுவினருக்கு எங்கள் நன்றி 🙏🏻

இறைவன் படங்களை அழகுற வைத்துக் கொள்ள அலமாரியைக் கொடுத்த திருமதி ரேவதி நடராஜன் (வீட்டு எண் 60) அவர்களுக்கும், கீழே அமர்ந்து கொண்டு வழிபாடு செய்ய அழகிய கார்ப்பெட் கொடுத்த திருமதி சுபா சங்கர்(வீட்டு எண் 23..Phase..2) அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புண்ய க்ஷேத்திரவாசிகள் கூட்டு வழிபாடுகளில் இணைந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம்.

Comments

Popular posts from this blog

ஜெயஜெய தேவா.

கூட்டு பிரார்த்தனை..கட்டுரை