Posts

செல்வ விநாயகனே சரணம்...பாட்டு

Image
செல்வ விநாயகனே சரணம் வல்லவனே எமக்கென்றும் நல்லன செய்வாய்...செல்வ பல்வகை செல்வமும் பாரினில் யாம் பெற.. அல்லல்கள் நீங்கிட வரமருள்வாயே.. எம் அல்லல்கள் நீங்கிட வரமருள்வாயே...செல்வ ஓம் எனும் நாதத்தின் உயர் பொருள் நீயே.. ஓங்கியே சிறப்புற கணபதி நீயருள்வாய்.. புண்ணிய க்ஷேத்திரத்தை புகழ் பெறச் செய்வாய்... எம் புண்ணிய க்ஷேத்திரத்தை புகழ் பெறச் செய்வாய்... எண்ணிய எல்லாம் நிறைவுற அருள்வாய்.. யாம் எண்ணிய எல்லாம் நிறைவுற அருள்வாய்..செல்வ

செல்வ விநாயகா சரணம்...கட்டுரை

Image
செல்வ விநாயகா சரணம் குடந்தை அருகில் மாங்குடியில் இயற்கை அழகோடு காவிரித் தாயின் கவின் மிகு வளத்தோடு, பல புண்ணிய க்ஷேத்திரங்கள் சூழ்ந்த புனிதமான பூமியில் அழகுற அமைந்துள்ள எங்கள்  புண்ணிய க்ஷேத்திரத்தில் மறைந்து கொண்டிருக்கும் அக்கிரஹாரத்தை மீண்டும் சிறப்புற உருவாக்கிய நிர்வாகி திரு லக்ஷ்மி நரசிம்மன்,திருமதி லக்ஷ்மி பிரபா மற்றும் அவர் குடும்பத்தினர்க்கு நன்றி 🙏🏻. இவ்விடத்தில் ஒரு ஆலயம் உருவாக்கும் ஆசை எங்களுக்கு இருந்ததால், கடந்த  பிப்ரவரி 15 அன்று ஸ்ரீ செல்வ விநாயகருக்கு ஒரு சிறு ஆலயம் உருவாக்கப்பட்டது. மிக அழகாக அற்புதமான கலை அம்சத்துடன், அவரை தரிசித்ததுமே நம் துன்பங்களை, துக்கங்களை, அல்லல்களை அருகில் வராமல் அகலச் செய்யும் மனநிலையைத் தரும்  ஈசன் மகன் ஐங்கரனைக் காணக் கண்கோடி வேண்டும். இறைவனை புதிதாகப் பிரதிஷ்டை செய்து அவருக்கு பிராண சக்தியைத் தரும்   ஹோமங்கள்  வேத மந்திரங்களுடன் ஆகம விதிப்படி  கும்பாபிஷேகத்தை  சிறப்புற நிகழ்த்திய சிவாச்சாரியர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🏻. இன்று மண்டல பூஜை மிக விமரிசையாக நடை பெற்றது. தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் மண்டலாபிஷேக நாள் வரை பூஜை செய்

🙏🏻ஓம் கம் கணபதயே நம:🙇... கட்டுரை

  🙏🏻ஓம் கம் கணபதயே நம:🙇 நாம் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் முதலில் வணங்கி வழிபடுவது சக்தியின் மைந்தன் சித்திகளைத் தரும் ஸ்ரீமகா கணபதி பெருமானையே. நம் இடர்களை நீக்கி வினைகளைக் களைந்து நாம் ஆரம்பிக்கும் செயலை குறைவற நிறைவேற்றித் தருபவர் ஈசன் மகன் ஞானகணேசனே. விநாயகர் வலம்புரி, இடம்புரி என்று இரண்டு விதமாகக் காட்சி தருவார். அவரது தும்பிக்கை வலப்பக்கம் திரும்பியிருந்தால் வலம்புரி விநாயகர் என்றும் இடப்பக்கம் திரும்பியிருந்தால் இடம்புரி விநாயகர் என்றும் நாம் அறிவோம். அவருக்கு சித்தி (Sidhdhi), ரித்தி (Ridhdhi) என இரு மனைவியர் உண்டு. நம் நாட்டில் பிரம்மசாரியாகக் கூறப்படும் கணபதி மற்ற மாநிலங்களில் இரு மனைவியருடன் வழிபடப் படுகிறார். கணபதியின் வலப்பக்க தும்பிக்கை சித்தியையும், இடப்புறம் ரித்தியையும் குறிக்கிறது. இடம்புரி விநாயகரே பெரும்பாலான ஆலயங்களில் காட்சி தருவார். இவரே எளிய மனிதர்கள் பூஜிக்கவும், வணங்கி வழிபடவும் ஏற்றவர் என்பதுடன் உலகியல் ரீதியான நல்ல வாழ்க்கை, செல்வம், உடல்நலம் போன்ற லோகாதயமான ஆசைகளையும், வேண்டுதல் களையும் நிறைவேற்றுபவர். வலம்புரி விநாயகரை வேத முறைப்படி வழிபட வேண்

கூட்டு பிரார்த்தனை..கட்டுரை

 புண்ணிய க்ஷேத்திரத்தில் ஆன்மிக அலைகளைப் பரப்பி புனிதப் படுத்த அனைவரையும் இணைத்து கூட்டு பிரார்த்தனை செய்து இறைவனை ஆராதிக்க எங்களைத் தேர்ந்தெடுத்தமைக்கு  மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவம் நாம் அறிவோம்.க்ருதயுகத்தில் தியான மார்க்கமாகவும், த்ரேதா யுகத்தில் வேள்வி மார்க்கமாகவும், துவாபர யுகத்தில் விக்ரஹ வடிவை பூஜித்தும் கிடைத்த பலன்  கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம்  மூலம் கிடைத்துவிடும். இக்கலிகாலத்தில் நாமஸ்மரணையும், ஸ்லோக பாராயணமுமே  இறைவனை அடையும் வழியாகப் பெரியோர் கூறியிருப்பது நாம் அறிந்ததே. நான்கு ஆண்டுகளாக அனுபவம் பெற்ற திருமதி லலிதா, திருமதி ஜெயா அவர்களின் வழிகாட்டலில் சிறப்பாக நடத்த தேவியின் அருளை வேண்டுகிறேன். எளிய முறையில் கூட்டு பிரார்த்தனை செய்யும் எங்களுக்கு மண்டலி, வழிபாட்டுக்குழு என்ற தனிப்பட்ட பெயரெல்லாம் தேவையில்லை என்பது எங்கள் எண்ணம். இந்த கூட்டுப் பிரார்த்தனை கடந்த கொரோனா நாட்களில் எங்களுக்கு  ஒரு மனநிம்மதியையும், பாதுகாப்பையும் கொடுத்ததை இரண்டு வருடங்களாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும்  புண்ணிய க்ஷேத்திரவாசிகள் மறந்திருக்க மாட

செல்வ விநாயக வாவாவா...பாடல்

செல்வ விநாயக வா வா வா வந்தே ஒரு வரம் தா தா தா பார்வதி புத்ரா வாவாவா பரமனின் புதல்வா வாவாவா கந்தனின் அண்ணா வா வா வா கனிவுடன் ஒரு வரம் தா தா தா(செல்வ) பானை வயிறனே வாவாவா யானை முகத்தனே வா வா வா பக்தரைக் காத்திட வாவாவா பணிந்தேன் ஒரு வரம் தா தாதா  (செல்வ) குள்ள குள்ளனே வா வா வா குண்டு வயிறனே வா வா வா வலம்புரி நாதா வா வா வா வந்திங்கு ஒரு வரம் தா தா தா (செல்வ) தும்பிக்கை நாதனே வாவாவா நம்பிக்கை எமக்கு தாதாதா சங்கடம் நீக்கிட வாவாவா மங்கலம் அருளிட வாவாவா(செல்வ) மோதகக் கையனே வாவாவா சாதகம் எமக்கே செய்திடுவாய் தாமதிக்காமல் வாவாவா நல்ஞானத்தை எமக்கு தாதாதா(செல்வ) எல்லாம் அறிந்த செல்வ விநாயக எவ் வரம் கேட்பேன் தெரியாதா புண்ணியக்ஷேத்திர மாந்தரையே அன்புடன் காத்தருள் புரிந்திடுவாய்(செல்வ)  

ஜெயஜெய தேவா.

  ஜெயஜெய தேவா..ஜெயஜெய தேவா..செல்வ விநாயக சரணம்.. (ஜெய ஜெய தேவா) விக்னேஸ்வரனை துதித்தால் என்றும் துன்பம் அகன்றிடுமே.. ஐயன் கணபதி தாளினை  நினைத்தால் சகல வினைகளும் நீங்கும்..சர்வ மங்களம் சேரும்.. (ஜெயஜெய தேவா..) வக்ர துண்டனை வழிபட்டால் நம் வாழ்வு நலமாகும்.. சிவ சக்தி பாலனை சிந்தையில் துதித்தால் நினைப்பது நிறைவேறும்.. அத்தனை மரத்தின் கீழும் அழகாய் அமர்ந்திருப்பவன் நீயே.. வேண்டும் வரங்களை எமக்கருள் செய்வாய் செல்வ விநாயக நீயே.. ஸ்ரீ செல்வ விநாயக நீயே.. ஜெயஜெய தேவா..ஜெயஜெய தேவா.. பாசம் அங்குசம் தந்தம் மோதகம் நான்கு கரங்களில் தாங்கி நிற்பார்..சுவாமி(பாசம்) மூஞ்சூறின் மேல் அமர்ந்திருப்பார்.. முழுமுதல் கடவுளும் அவரே.. முக்தியைத் தருவதும் அவரே.. கணபதி..கணேசன்..விக்னவிநாசன் அவரே.. செல்வ விநாயக சரணம்.. ஸ்ரீ செல்வ விநாயக சரணம் ஜெயஜெய தேவா..

செல்வ(ல)விநாயகா சரணம்🙏🏻...கட்டுரை

 செல்வ(ல )விநாயகா சரணம்🙏🏻 புண்ணிய க்ஷேத்திரத்தில் பொலிவோடும் சிறப்போடும் ஆலயம் கொண்டு அழகுற அமர்ந்திருக்கும் ஆனைமுகனின் அருளை நாம் ஆனந்தமாக அடைந்து கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. இவர் செல்வத்தைத் தரும் எங்கள் செல்லப் பிள்ளையார்! சோலை நடுவில் எழுப்பப்பட்ட அழகிய ஆலயத்தில் அருள் தர வேண்டிய விநாயகர் அவசரமாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தது ஏன் என்று என் மனதில் ஏற்பட்ட கேள்விகளுக்கு பதிலையும் அவரே சொல்வது போல் உணர்ந்தேன். பலநாள் ஜல வாசம் செய்த கணபதிக்கு புண்ய க்ஷேத்திரத்தின் அழகைக் கண்டு ரசித்து மக்களுக்கு வரங்களை வாரி வழங்கும் ஆசை உண்டானதோ! தனக்காக உருவாக்கப்பட்ட இடம் தனக்கு சொந்தமில்லை என்பதை அவர் அறிய மாட்டாரா? அதன் பொருட்டே தற்சமயம் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அவசரமாய் குடியேறி விட்டாரோ! எப்படியோ இன்று அவரது அருள்விழிகளின் கடாட்சம் அவ்வழி செல்லும் அனைவருக்கும் கிடைப்பதை மறுக்க முடியுமா? அவரைப் பார்த்தும் பார்க்காமலும் ஒதுங்கியும்  வணங்காமலும் செல்லும் அனைவரையும் அவர்  பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அவ்வாலயத்துள் அவரை பிரதிஷ்டை செய்திருந்தால் நாம் அவ்விடம் சென்றால