🙏🏻ஓம் கம் கணபதயே நம:🙇 நாம் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் முதலில் வணங்கி வழிபடுவது சக்தியின் மைந்தன் சித்திகளைத் தரும் ஸ்ரீமகா கணபதி பெருமானையே. நம் இடர்களை நீக்கி வினைகளைக் களைந்து நாம் ஆரம்பிக்கும் செயலை குறைவற நிறைவேற்றித் தருபவர் ஈசன் மகன் ஞானகணேசனே. விநாயகர் வலம்புரி, இடம்புரி என்று இரண்டு விதமாகக் காட்சி தருவார். அவரது தும்பிக்கை வலப்பக்கம் திரும்பியிருந்தால் வலம்புரி விநாயகர் என்றும் இடப்பக்கம் திரும்பியிருந்தால் இடம்புரி விநாயகர் என்றும் நாம் அறிவோம். அவருக்கு சித்தி (Sidhdhi), ரித்தி (Ridhdhi) என இரு மனைவியர் உண்டு. நம் நாட்டில் பிரம்மசாரியாகக் கூறப்படும் கணபதி மற்ற மாநிலங்களில் இரு மனைவியருடன் வழிபடப் படுகிறார். கணபதியின் வலப்பக்க தும்பிக்கை சித்தியையும், இடப்புறம் ரித்தியையும் குறிக்கிறது. இடம்புரி விநாயகரே பெரும்பாலான ஆலயங்களில் காட்சி தருவார். இவரே எளிய மனிதர்கள் பூஜிக்கவும், வணங்கி வழிபடவும் ஏற்றவர் என்பதுடன் உலகியல் ரீதியான நல்ல வாழ்க்கை, செல்வம், உடல்நலம் போன்ற லோகாதயமான ஆசைகளையும், வேண்டுதல் களையும் நிறைவேற்றுபவர். வலம்புரி விநாயகரை வேத முறைப்படி வழிபட ...